சிந்துவின் குழந்தைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தான் அப்பா! வெளிவரும் ஆதாரங்கள்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பற்றிய ஆதாரங்கள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றான.

சிபாரிசு கேட்டு சென்ற சிந்து என்ற இளம்பெண்ணை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாலியல் துன்புறுத்தல் செய்து கர்ப்பமாக்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் முற்றிலும் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், சம்மந்தப்பட்ட பெண் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அதை தொடர்ந்து சிந்து தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பொலிஸில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிந்து தரப்பினர், தாங்கள் அப்படி யாரையும் ஏமாற்றவில்லை எனவும், விரைவில் அமைச்சர் தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க உள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தன்னுடைய குழந்தைக்கு ஜெயக்குமார் தான் தந்தை என்பதை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறிவருகின்றனர்.

இதற்கிடையே சிந்துவுக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் தரப்பு இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Previous Post Next Post