யாழ்.மாநகர வீதிகளுக்கு வீதிவிளக்குகள் பொருத்தல் (படங்கள்)


யாழ். மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில், பல வீதிகள் மற்றும் உள்ளொழுங்கைகளுக்கு புதிய வீதி விளக்குகள் இன்றைய தினம் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்தின் முயற்சியால் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ். மாநகரசபை ஏற்பாட்டில் வட்டாரத்துக்கு 20 புதிய விளக்குகள் எனும் வீதி விளக்குகள் பொருத்தும் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் இப்புதிய வீதி விளக்குகள் யாழ்.மாநகரசபையின் மின்சாரப் பொறியியல் பிரிவினரால் பொருத்தப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளன.

யாழ். மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில் அமைந்துள்ள ஜே/100 வண்ணார்பண்ணை வடகிழக்கு பிரிவில் பிறவுண் வீதி உள்ளொழுங்கைகள், அரசடி வீதி உள்ளொழுங்கைகள், கே.கே.எஸ் வீதி உள்ளொழுங்கை என்பனவற்றுக்கும் ஜே/102 கந்தர்மடம் வடமேற்கு பிரிவில் பிறவுண் வீதி உள்ளொழுங்கைகள், அரசடி வீதி உள்ளொழுங்கைகள் மற்றும் ஜே/123 கொக்குவில் தென்கிழக்கு பிரிவில் மதவடி ஒழுங்கை என்பனவற்றுக்குமே இவ்வாறு புதிய வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.


Previous Post Next Post