வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது
வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது
கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே இன்று இரவு 09.30மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவார் இவர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணி புரிந்து இலங்கை திரும்பி இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரன்பாட்டினால் குறித்த இளைஞன் தற்கொலை செய்திருக்கலாம் என அறியப்படுகிறது
தற்சமயம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன