லொறியில் சென்றபோது மாயமான தமிழ் இளைஞர்: கதறும் வயதான பெற்றோர்

மகாராஷ்டிராவில் வேலைக்கு சென்ற இளைஞர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞரின் பெற்றோர் கண்ணீருடன், ஈரோடு பொலிசாரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 24 வயது சுரேஷ், குடும்ப சூழ்நிலையின் காரணமாக நண்பர்களோடு சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக போர்வெல் வண்டிக்கு வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 10-ம் திகதி வடமாநிலத்திற்கு போர்வெல் வண்டியில் வேலைக்கு போவதாகச் சென்ற இளைஞர் சுரேஷ் மாயமாகியிருக்கிறார்.

லொறி சாரதி அருகே படுத்திருந்த சுரேஷ், இரவு நேர தூக்கக் கலக்கத்தில் லொறியில் இருந்து தவறி விழுந்து காணாமல் போய்விட்டார் என உடன் வேலை பார்த்தவர்கள், சுரேஷின் பெற்றோருக்கு போன் வழியாக அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

இதனைக்கேட்டுப் பதறிப்போன சுரேஷின் பெற்றோர், லொறியின் உரிமையாளரிடம் போன் போட்டு என்ன நடந்தது என விசாரித்திருக்கின்றனர்.

ஆனால் லொறி உரிமையாளரோ, தேடிக்கிட்டு இருக்கோம் என மிக சாதாரணமாக பதில் சொல்லியிருக்கின்றார்.. இதனையெல்லாம் கேட்டு துடித்துப்போன சுரேஷின் பெற்றோர், ‘எங்களுடைய மகன் எங்கு இருக்கிறான். அவனுக்கு என்ன ஆனது என கண்டுபிடித்துக் கொடுங்கள்’ எனக் கண்ணீரோடு ஈரோடு எஸ்.பியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்திருக்கின்றனர்.

லோறியோட உரிமையாளர் இதுக்கு முன்னாடி, அவரிடம் வேலை பார்த்த நிறையப் பேரை அடிச்சிருக்காரு. வேலைக்கு வரலைன்னா வீடுதேடி வந்து சத்தம் போட்டு, மிரட்டி கூட்டிட்டு போவார்.

இதுசம்பந்தமாக அவர் மேல கோபி சுற்றுவட்டாரத்தில் 3 வழக்குகள் இருக்கு. என்னோட பையனும் அவர்கிட்ட 25 ஆயிரம் கடன் வாங்கியிருந்தான்.

ஒருவேளை அதனால என் பையனை ஏதாவது பண்ணியிருப்பாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு. ஆசை ஆசையா பெத்த ஒத்த புள்ளையும், இப்ப எங்க இருக்கான்னு தெரியாம, எங்களுக்கு உடம்புல சோறு தண்ணி இறங்க மாட்டேங்குது” என கண்ணீர் வடித்தார் சுரேஷின் தந்தை மாதப்பன்

Previous Post Next Post