பக்கத்து வீட்டு இளைஞர்களின் கொடூரச்செயல்: அவமானம் தாங்காமல் விபரீத முடிவெடுத்த இளம்பெண்

டெல்லியில் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதால் அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி புகாரி பகுதியை சேர்ந்த தயாசங்கர் சர்மா - பிரேம் குமாரி தம்பதியின் மூத்த மகள் சில்பா (21). இவர் தன்னுடைய இளங்கலை படிப்பை முடித்துவிட்டு முதுகலை படிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு பிரியங்கா ஷர்மா என்ற இளைய சகோதரி உள்ளார். தயங்கர் சர்மா அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுகிழமையன்று சில்பா குடும்பத்தாருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவரின் குடும்பத்துக்கும் கடுமையான சண்டை நடந்துள்ளது.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சில்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவருடைய அம்மா பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

அந்த சமயம் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்களின் தந்தை ஷியாம்லால், சில்பாவிடம் சிறிது நேரம் பேச வேண்டும் என கூறி கதவை திறக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதைக்கேட்டு ஷில்பாவும் கதவை திறந்துள்ளார். அவர் கதவை திறந்ததும், பக்கத்து வீட்டு இளைஞர்களான சஞ்சய் மற்றும் அமர் வீட்டினுள் புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளார். உடைந்த கண்ணாடி பாட்டில் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கியதில் ஷில்பா காயமடைந்துள்ளார்.

சம்பவம் அறிந்து வீட்டிற்கு ஓடி வந்த பெற்றோர் ஷில்பாவை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ள ஆர்மபித்தனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷில்பா, இரவோடு இரவாக வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மறுநாள் காலையில் மகள் நீண்ட நேரம் வெளியில் வராததை அறிந்து கதவை திறந்த பெற்றோர் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள பொலிஸார், ஷில்பா பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவருடைய பெற்றோர் இளைஞர் வீட்டுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் தான் ஷில்பா தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post