தமிழகத்தில் கடலை வியாபாரம் செய்து வந்த இலங்கை அகதிக்கு நேர்ந்த நிலை! தொல்லை கொடுப்பதாக வேதனை

தமிழகத்தில் இலங்கை வாழ் அகதியான சதீஷ்குமார் என்பவர் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பெரம்பலூரில் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தில், சோதனை நடத்தி வந்த போக்குவரத்து காவல்துறையினர், அங்கு கடலை வியபாரம் செய்து வந்த சதீஷ்குமார் என்பவரிடம், குடும்ப அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்றவைகளை கேட்டுள்ளனர்.

அப்போது திடீரென்று சதீஷ் அங்கிருந்த மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றி, பொலிசார் தனக்கு தொல்லை கொடுப்பதாக கூறி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் பொலிசார் தடுத்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் பெரம்பலூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post