கண்களில் கண்ணீர் வரவைக்கும் குட்டி காதல் கதை…(உண்மைச் சம்பவம்)

ஒரு குட்டி காதல் கதை, அமைதியாக வாசிக்கவும்…

ஒரு ஊரில் இளைஞன் ஒருவர் அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்துள்ளார்.

ஆனால், அந்த அழகிய பெண் அவனை விட்டு விலகி விலகி போய்க் கொண்டிருந்தாள்.ஒரு நாள் அந்த இளைஞன் அவளிடம் தன் காதலை மனம் விட்டு கூறியுள்ளார்.

அந்த அழகிய பெண் இளைஞருக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். ஒரு மாதம் முழுவதும் அவளை பார்க்காமல் பேசாமல் அவன் இருக்கவேண்டும் என்று

அப்படி உன்னால் இருக்க முடிந்தால் உன்னை நான் காதலிக்கிறேன் என்று கூறினாள். அந்த இளைஞரும் சம்மதம் கூறி சென்றுள்ளார்.

ஒரு மாதம் முழுவதும் முடிந்தது ஆசையாக குறித்த இளைஞர் அந்த பெண்ணை பார்க்க சென்றுள்ளார்.

அவன் அவளை பார்ப்பதற்காக நிறைய காதலோடும், ஒரு சிவப்பு ரோஜாவை கையில் ஏந்தி கொண்டும் ஓடோடி சென்றுள்ளார்.

ஆனால், அவன் அங்கே கண்டது, காதலியின் மரண படுக்கையையும் அவளின் அழகிய கையில் இருந்த ஒரு கடிதத்தையும்

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

‘’நீ ஜெயித்துவிட்டாய்,ஒரு மாதம் முழுவதும் உன்னால் என்னிடம் பேசாமலும், பார்க்காமலும் இருக்க முடியும் என நிரூபித்து விட்டாய்.இனி வரும்காலங்களிலும் நீ இதே போல் வாழ்ந்து விடு,நான் உன்னை உயிராக நேசித்தேன்.. ’’என்ற வரிகள்.

அந்தப் பெண் புற்று நோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். இதேவேளை, இன்னும் அவளுக்காக சுவற்றில் அவளுடைய புகைப்படத்திற்கு அருகில் துணையாக புகைப்படமாக வாழ்கிறான் அந்த இளைஞர்.அங்கே இரண்டு கடிதங்கள் இருக்கின்றன, ஒன்று அந்தப் பெண்ணுடையது, மற்றொன்று அவன் கடைசியாக ரோஜாவோடு கொண்டு வந்த அவளுக்கான கடிதம்.
அதில் இரண்டு வரிகள் இப்படி எழுதப்பட்டிருந்தது

’’உன்னை காதலித்த பிறகு தான் அறிந்து கொண்டேன், ஒரு மாதம் தான் நீ உயிர் வாழ்வாய் என்று. அதனால்தான் என் வாழ்நாளையும் ஒரு மாதமாய் குறைத்து கொண்டேன்.

ஒரு மாதமாய் உன்னை பார்க்காமல் இருந்தது உன் காதலுக்கு நான் கொடுத்த மரியாதை. தற்போது உன் அருகில் அமைதியாகவும், என் ஆழமான காதலுடனும் உறங்க வருகிறேன் உயிரே…“ என்று எழுதப்பட்டிருந்தது.
உண்மையான காதல் கல்லறையில் வாழும் என்பதை குறித்த இளைஞர் நிறுபித்து விட்டார். இது குட்டி கதை மட்டும் இல்லை,உண்மை சம்பவமும் கூட. இந்த காதலர்கள் இன்று உயிருடன் இல்லை என்றாலும் காதல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

Previous Post Next Post