தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கட்டிய தாலியை கழற்றிவிட்டு காதலனுடன் கைகோர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாராபுரத்தைச் சேர்ந்தவர் ரம்யா. பட்டதாரியான இவர் காட்டுவளவை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதையறிந்த ரம்யாவின் குடும்பத்தினர், அவசர அவசரமாக உறவினர் அருள்குமாருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
திருமணமாகி ஒரு மாதமான நிலையில், அருள்ராஜ் கட்டிய தாலியை குளியல் அறையில் கழற்றி வைத்து விட்டு ரம்யா தலைமறைவானதாக கூறப்படுகிறது.
அவரை தீவிரமாக தேடிய உறவினர்கள், காதலன் சிவகுமார் வீட்டில் ரம்யா தஞ்சமடைந்திருப்பதை அறிந்துள்ளனர்.
இதையடுத்து காதலனுடன் சேர்ந்து சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்குச் சென்ற ரம்யா, தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் அளித்துள்ளார். எனவே அது சட்டப்படி செல்லாது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஓமலூர் காவல்துறையினர் 3 குடும்பத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுத ரம்யா,
இறுதியாக அவரின் விருப்பப்படி காதலன் சிவகுமாருடன் கைகோர்த்தார். ஒரு மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் அருள்குமார் வீடு திரும்பினார்.