மனைவி தலையை துண்டித்து கையில் எடுத்த கணவன்: திருமணமான சில மாதங்களில் வெறிச்செயல்

தமிழகத்தின் திருவெறும்பூரில் மனைவியின் தலையை துண்டித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிலோமினாள்புரம் முதல்தெருவை சேர்ந்த சங்கர் சகாயராஜ்.

இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த ஜெசிந்தாஜோஸ்பின் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு சங்கர்சகாயராஜுக்கும், ஜெசிந்தாஜோஸ்பினுக்கும் இடையே மீண்டும் தகறாறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சங்கர்சகாயராஜ், ஜெஸ்சிந்தாஜோஸ்பின் தலையை அரிவாளால் வெட்டி தனியாக துண்டித்துள்ளார்.

பின்னர் இரவு முழுவதும் சடலத்துடனேயே தங்கியிருந்த சங்கர்சகாயராஜ், காலையில் ரத்தகரையோடு வெளியில் வந்தார்.

இது குறித்து தகவலறிந்து சென்ற பொலிசார் சங்கர் சகாயராஜைக் கைது செய்தனர்.

அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Previous Post Next Post