வீட்டு வாசலில் துண்டாக துண்டாக வெட்டப்பட்ட இளைஞன்! பகீர் சம்பவம்

தமிழகத்தின் மதுரையில் வீட்டு வாசலில் இளைஞர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் பாலமுருகன், இவரது மகன் பிரவீன் குமார், கல்லூரி ஒன்றில் படித்து வரும் பிரவீன் குமாருக்கு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது பிடித்தமான ஒன்று.

இதனால் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது.

இதனால் பிரவீனை தீர்த்துக்கட்ட கண்ணன் திட்டமிட்டார், இதன்படி நேற்று தனது நண்பருடன் பிரவீன் பேசிக் கொண்டிருந்த வேளையில், 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று பிரவீனை சரமாரியமாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் பலியானார், அவரது நண்பர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தெப்பக்குளம் பொலிசார் விசாரணை நடத்தினர், பிரவீன் குமாரை கொன்றதாக கூறப்படும் கண்ணன் அவரை கொலை செய்வதற்கு முன்பாக அரசமகாராஜன் என்பவரை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கண்ணனையும், 8 பேர் கொண்ட கும்பலையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
Previous Post Next Post