பல இடங்களில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்….பயத்தில் உறைந்த பொதுமக்கள்……!!

யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யில் நேற்று இரவு 3 இடங்­க­ளில் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன. அத­னால் நக­ரப் பகுதி பதற்­றத்­துக்­கும் பர­ப­ரப்­புக்­கும் உள்­ளா­னது. ரோந்து நட­வ­டிக்­கை­க­ளி­லும், சோதனை நட­வ­டிக்­கை­க­ளி­லும் பொலி­ஸார் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­போ­தும் 6 பேர் ஆளுக்கு ஒரு வாளு­டன் அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்­டமை மக்­கள் மத்­தி­யில் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் நாச்­சி­மார் கோவி­ல­டிப் பகுதி, ஓட்­டு­ம­டம் சந்தி,  யாழ்ப்­பா­ணம் பி.ஏ.தம்பி லேன் ஆகிய இடங்­க­ளி­லேயே நேற்று இரவு வாள்­வெட்­டுக் குழு அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அத­னால் வர்த்­தக நிலை­யங்­கள், வாக­னங்­கள் சேதங்­க­ளுக்க உள்­ளா­கின தெரி­விக்­கப்­பட்­டது.

நாச்­சி­மார் கோவி­ல­டிப் பகு­தி­யில் இரவு 8.13 மணி­ய­ள­வில் பட்டா ரக வாக­னம் ஒன்றை வழி­ம­றித்த வாள்­வெட்­டுக் குழு­வி­னர் வாக­னத்தை அடித்­தும், வெட்­டி­யும் சேதங்­க­ளுக்னு உள்­ளா­கி­யுள்­ள­னர்.8.20 மணி­ய­ள­வில் யாழ்ப்­பா­ணம் பி.ஏ.தம்பி லேனுக்­குள் நுழைந்த குழு­வி­னர் அங்­குள்ள வர்த்­தக நிலை­யம் ஒன்­றைத் தாக்­கி­யுள்­ள­னர்.

கண்­ணா­டி­களை உடைத்து பொருள்­க­ளைச் சேதப்­ப­டுத்­தி­விட்டு ஓரிரு நிமி­டங்­க­ளில் அங்­கி­ருந்து தப்­பித்­த­னர். முகங்­களை கறுப்­புத துணி­யால் மூடிக்­கட்­டி­ய­வாறு மூன்று மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வந்த ஆறு பேரே அந்த நாச­கா­ரச் செய­லைச் செய்­துள்­ள­னர். அனை­வ­ரும் ஆளுக்­கொ­ரு­வாள்­க­ளு­டன் வந்­த­னர் என்று சம்­பவ இடத்­தில் நின்­ற­வர்­கள் கூறி­னர்.

சம்­பவ இடத்­துக்கு சிவில் உடை தரித்த சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் வந்­த­னர். அவர்­கள் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். சிசி­ரிவி கம­ரா­வின் பதி­வு­க­ளைப் பெற்­ற­னர். சிறிது நேரத்­தில் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸார் வந்­த­னர். அவர்­க­ளும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

அதன்­பின்­னர் ஓட்­டு­ம­டம் பகு­தி­யில் வீதி­யால் சென்ற ஒரு­வர் மீது வாள் வீசி அச்­சு­றுத்­தி­ய­வாறு அந்­தக் குழு சென்­றுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வாள்­வீச்­சுக்கு உள்­ளா­ன­வர் தெய்­வா­தீ­ன­மா­கக் காயங்­க­ளில் இருந்து தப்­பிக் கொண்­டார் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.இந்­தச் சம்­ப­வங்­கள் சுமார் அரை மணி நேரத்­துக்­குள் நடந்­துள்­ளன. ஒரே குழுவே இந்த 3 சம்­ப­வங்­க­ளில் தொடர்­பட்­டி­ருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றைச் சம்­ப­வங்­களை அடுத்­துப் பொலி­ஸா­ரின் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பொலி­ஸா­ரின் சுற்­றுக்­கா­வல், சோதனை நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனி­னும் ஆளுக்­கொரு வாளு­டன் வீதி­க­ளில் துணி­வாக பய­ணித்து வாள்­வெட்­டுக்­க­ளில் குழுக்­கள் ஈடு­ப­டு­வது மக்­கள் மத்­தி­யில் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

Previous Post Next Post