இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்!

காலியில் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் சமூக பொலிஸ் பிரிவினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை தொடர்பில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணிகளின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பர பலகை தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.

“சரியான முறையில் ஆடை அணிந்து, இலங்கை கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்” என விளம்பர பலகையில் குறிப்பிட்டுள்ளது. எனினும் அதில் பெண்கள் இருவர் பிகினி ஆடை அணிந்திருப்பதனை போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிகினி அணிந்து அந்த பகுதி கடற்கரை நடப்பதற்கு அனுமதிப்பதில்லை என்பதனையே அந்த புகைப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலா பயணிகள் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தற்போது தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையின் அழகிய கடற்கரைகளை ரசிக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு உடை கட்டுப்பாடு அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Previous Post Next Post