நண்பனைக் காப்பாற்ற துடித்த நண்பர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

வாழ்க்கை என்பது சந்தோசம் மட்டுமல்ல பல துன்பங்களும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்தது. ஒருவர் மரணிக்கும்போது மற்றொருவர் பூமியில் பிறக்கிறார்.

ஒருவர் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்போது மற்றையவர் வாழத்துடிக்கிறார். அந்த வகையில் தமது நண்பனை வாழ வைக்க நினைத்த நண்பர்கள் எதிர்பாராத நிகழ்வை சந்தித்துள்ளனர்.

பொரள்ள கன்னங்கர வித்தியாலயத்தில் சாதாரண தரம் பயின்று விசேட சித்திடைந்த தீக்சண அபசேகர, கொழும்பிலுள்ள தர்ஸ்டன் கல்லூரியில் கணிதப் பிரிவில் பயின்று அதிலும் சித்திடைந்து மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு செய்துள்ளார்.

26 வயதான சிவில் பொறியியலாளராக தொழில்செய்யும் குறித்த இளைஞன் இரத்தப்புற்றநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 13ம் திகதி ஜெயவர்த்தன மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வயது இளைஞர்களுக்கு மிகவும் அரிதாக ஏற்படும் T-ALL என்ற பெயருடைய இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன் அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பல கஷ்டங்களுக்கு குறித்த இளைஞனும், அவர்களது நண்பர்களும் முகம்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞனின் சிகிச்சைக்காக சுமார் 60 லட்சம் ரூபா தேவைப்படுமெ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞனின் நண்பர்கள் ஒன்றிணைந்து நண்பனை வாழ வைக்க வேண்டுமென தீர்மானமொன்றை எடுத்துள்ளனர்.

நேற்று காலை அவருக்காக பணம் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதென தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையில், துரதிஸ்டவசமாக குறித்த இளைஞன் இந்த உலகத்தை விட்டுச்சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக அவரது நண்பர்கள் பேஸ் புத்தகத்தில் தங்களது உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர்.

Previous Post Next Post