முல்லை மாணவன் மட்டக்களப்பில் மரணம்-பகிடிவதை காரணமா?

மட்டக்களப்பு – கல்வியற் கல்லூரியில் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனின் சடலம் ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், கல்வியற் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த 23 வயதுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் கல்லூரியில் இணையும் போது ஏழு பேர் கொண்ட மாணவ குழுவினால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் கல்லூரிக்கு செல்லமாட்டேன் எனத் தெரிவித்து வீட்டில் இருந்துள்ளார். ஆனால் பெற்றோர் அவரை மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் மாணவனின் மரணம் தொடர்பாக பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous Post Next Post