இலங்கையில் நடந்த துயர சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி!

தெகியத்த கண்டி, ஊத்துலபுரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிப்பர் வாகனமொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தின்போது 34 வயதுடைய தந்தை, 14 மற்றும் 10 வயதுடைய பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தாயும் மற்றுமொரு பிள்ளையும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post