வெளிநாட்டிலிருந்து காதலனை வரவழைத்து கணவனை துடி துடிக்க கொலை செய்த மனைவி! விசாரணையில் சொன்ன காரணம்

காதலனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு கணவன் தடையாக இருந்ததால், மனைவி அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் தானூரைச் சேர்ந்தவர் சாகத்(34). மீன் வியாபாரியான இவருக்கு சவுஜத்(30) என்ற மனைவியும் 4 வயதில் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் சவுஜத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பஷீர் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அதன் பின் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பஷீர் வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இருப்பினும் இருவரின் பழக்கமும் போனில் தொடர்ந்துள்ளது.

இதையடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு சவுஜத்தின் கணவர் தடையாக இருப்பதால் அவரை கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளனர்.

இதற்கு பஷீரின் நண்பர் உதவியுள்ளார். அதன் படி பஷீர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் அவரது நண்பர் காருடன் காத்திருந்தார்.
பின்னர் இருவரும் இரவு 11 மணியளவில் சவுஜத்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சவுஜத் கதவை திறந்த நிலையிலே வைத்துள்ளார். உடனடியாக வீட்டிற்குள் புகுந்த பஷீர் தூங்கிக் கொண்டிருந்த சாகத்தின் தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளார்.

இதனால் சாகத் இறந்துவிட்டதாக நம்பி பஷீர் உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆனால் சாகத் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்த அவரின் மனைவி, இன்னும் உயிர் பிரியவில்லையே என்ற ஆத்திரத்துடன் மீன் வெட்டும் அரிவாளை எடுத்து அவரின் கழுத்தை அறுத்து துண்டாக்கினார். அதன் பின் சிறிது நேரத்தில் சகாத்தின் உயிர் பிரிந்தது.

இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் கொலை செய்துவிட்டதாக கூறி சவுஜத் கதறி அழுதுள்ளார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர அவர்கள் உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சவுஜத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு, பின்னாக பதில் கூறியதால், பொலிசார் அவரிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர், காதலனுடன் சேர்ந்து வாழ கணவர் இடையூறாக உள்ளதாக நினைத்து வெளிநாட்டில் இருந்த கள்ளக்காதலனை விமானத்தில் வரவழைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதற்கு பஷீரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாக கூறினார்.

இதனையடுத்து சவுஜத் மற்றும் கொலைக்கு உதவிய பஷீரின் நண்பரை கைது செய்த பொலிசார், பஷீரை தேடி வருகின்றனர்.

Previous Post Next Post