குரங்கு பறித்த தேங்காய் தலையில் விழுந்து பெண் பலி!!

மாத்தளை, வட்டகொட – ஹூலங்கமுவ பிரதேசத்தில் குரங்கு பறித்து போட்ட தேங்காய் தலையில் விழுந்து வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் மாத்தளை – வட்டகொட, ஹூலங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான திலகா ரஞ்சனி குலரத்ன என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் வீட்டுக்கு வெளியில் முற்றத்தில் இருக்கும் போது வீட்டுக்கு அருகில் உள்ள தென்னை மரத்தில் இருந்த குரங்கு பறித்த தேங்காய் பெண்ணின் தலையில் விடுத்துள்ளது.

இந்த பெண்மணி திருமணம் செய்துக்கொள்ளாது வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Previous Post Next Post