ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையிலேயே இருப்பார் என முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் தற்போது நடைபெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொலை செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஒருவர் கூறிய சாட்சியத்தைக் கொண்டு ஜனாதிபதி எடுத்த இந்த திடீர் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கத்தயார். அதேபோல் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ரணிலின் பாதுகாப்பும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. நான் இன்னும் அதில் கையொப்பமிடவும் இல்லை.