குழந்தைகள் கண் எதிரில் மனைவியை கொன்ற கணவன்: அடுத்து செய்த திடுக்கிடும் செயல்

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26).

தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வரும்.

இந்நிலையில் நேற்று வெங்கடேசனுக்கும், துர்காவுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த வெங்கடேசன் தனது இரு பெண் குழந்தைகள் எதிரிலேயே துர்காவின் கழுத்தை நெரித்துக் கொன்றார்.

பின்னர் தனது குழந்தைகளை அருகில் உள்ள தாய் வீட்டில் விட்ட வெங்கடேசன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதையடுத்து ஏதேச்சையாக துர்கா வீட்டுக்கு வந்த உறவினர்கள் வெங்கடேசனும், துர்காவும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.




சம்பவம் குறித்து பொலிசாருக்கு தரப்பட்ட நிலையில் இரு சடலங்களையும் கைப்பற்றிய அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous Post Next Post