காதலியை சீண்டியவனை திட்டமிட்டு கொலை செய்த காதலன்: சில மாதங்கள் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்


சென்னையில் காதலியை சீண்டியவனை கொலை செய்த காதலன் சில மாதங்கள் கழித்து பழிக்குப்பழி தீர்க்கப்பட்டுள்ளார்.

கோயம்பேட்டை சேர்ந்த வயது வாலிபர் விக்னேஷ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அவர் காதலித்து வந்த பெண்ணுக்கு கணேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கணேஷை அழைத்து மது அருந்தலாம் என கூறிவிட்டு விக்னேஷ் அழைத்துச்சென்று இருவரும் மது அருந்திவிட்டு பைக்கில் சென்றுள்ளனர்.

கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் பின்பக்கம் அமர்ந்திருந்த விக்னேஷ் கணேஷின் விலா எலும்பில் கத்தியால் குத்திவிட்டு வண்டியிலிருந்து எகிறிக்குதித்து இறங்கியுள்ளான். இதனால் பைக்கை தாருமாறாக செலுத்திய கணேஷ் சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தான்.

இது விபத்தல்ல கொலை என கருதி கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் அந்த கொலைவழக்கின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் விக்னேஷ் கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட விக்னேஷ் 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் கடந்த வியாழனன்று வெளிவந்துள்ளார். தனது அண்ணனை கொலை செய்தவனை பழிக்குப்பழி வாங்க கணேஷின், தம்பி பிரகாஷ் திட்டமிட்டு தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு மைதானத்திற்கு வந்துள்ளான்.

மைதானத்துக்கு வந்த பிரகாஷ் மற்றும் அவன் நண்பர்கள் விக்னேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் விக்னேஷை கொலை செய்த பிரகாஷ் மற்றும் நண்பர்கள் உட்பட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post