கணவரின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ஹைதராபாத்தில் நேற்று நடந்த வாகன விபத்தில் கணவரின் கண்முன்னே, மனைவி துடிதுடித்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிரவீன் (28), விசாகபட்டினத்தை சேர்ந்த ரம்யா (28) என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

சனிக்கிழமையன்று தம்பதியினர் சில்குர் பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வளைவு ஒன்றில் வேகமாக லொறியை முந்தி செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி சக்கரங்களுக்கு இடையில் தம்பதியினர் சிக்கி கொண்டனர்.

இந்த விபத்தில் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பிரவீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பகா வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post