என் மனைவி இப்படி செஞ்சிட்டாளே! திருமணமான சில மாதங்களில் உயிரை விட்ட கணவன்

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் திருமணமான சில மாதங்களில் மனைவி பிரிந்து போனதால் கணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவீன் (24) என்ற இளைஞரும், இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான புதிதில் தம்பதியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

ஆனால் பின்னர் இருவருக்கும் இடையில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் நவீனை பிரிந்து தனியாக வாழ விரும்புவதாக அவர் மனைவி கூறினார்.

இதையடுத்து நவீன் அவர் மனைவியை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் தனியாக சென்றுள்ளார்.

இதனால் மனவேதனையில் இருந்த நவீன், சம்பவத்தன்று தனது தாயிடம், ஏன் அவள் இப்படி செய்தாள், என்னை விட்டு போய்விட்டாளே என புலம்பியுள்ளார்.

பின்னர் இரவு நவீன் தனது அறைக்கு சென்று தூங்கினார்.

இதையடுத்து காலையில் நவீனின் அம்மா அவர் அறைக்கு சென்ற போது அவர் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்த அவர், தனது மகனின் சாவுக்கு அவர் மனைவி தான் காரணம் என கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
Previous Post Next Post