
பிரபல திரைப்பட நடிகையான ரித்விகா குறிப்பிட்ட ஜாதியின் காரணமாகத் தான் வெற்றி பெற்றார் என்று கூறப்படுவதால், அதற்கு அவர் ஆக்ரோசமாக பதிலளித்துள்ளார்.
பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து மற்றும் கபாலி போன்ற படங்களில் நடித்திருந்த ரித்விகா, கடந்த முறை தமிழில் நடந்த பிக்பாஸ் 2 போட்டியில் கலந்து கொண்டார்.
100 நாட்கள் வீட்டில் வெற்றிகரமாக தங்கி, தமிழக மக்களின் இதயங்களை வென்ற ரித்விகாவே இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டு மக்கள் ரித்விகாவை தூக்கி வைத்து கொண்டாடினர்.
இந்நிலையில் ரித்விகா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அவள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவள் என்பதன் காரணமாகவே என்று ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதற்கு ரித்விகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என்று குறிப்பிட்டுள்ளார்.ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..— Riythvika✨ (@Riythvika) November 29, 2018
பிக்பாஸ் வீட்டில் அவருடைய நடவடிக்கைகளை பார்த்து தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். ஆனால் ஒரு சிலர் வேண்டும் என்றே இப்படி ஒரு தகவலை பரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.