திருமணம் முடிந்த 2 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட புதுமணப்பெண்தெலுங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரைக்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (22) கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக ராகேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தின்போது கிருஷ்ணவேணி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வரதட்சணை கொடுத்துள்ளனர்.

மாமியார் வீட்டில் நுழைத்ததிலிருந்தே கணவன் குடும்பத்தினர் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி தாய் வீட்டுக்கு விரட்டியுள்ளனர்.

தசரத விழாவிற்காக அம்மா வீட்டிற்கு சென்ற கிருஷ்ணவேணி, கணவரின் வீட்டிற்கு திரும்பாமல் அங்கேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு கிருஷ்ணவேணி திடீரெனெ தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணவேணியின் தந்தை உதிலி மல்லையா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post