60 வயது பாட்டியை துஷ்பிரயோகம் செய்து கொடூரமாக கொலை செய்த 20 வயது இளைஞன்

தமிழகத்தில் 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 வயது இளைஞன் ஒரு மாதத்திற்கு பின் சரணடைந்துள்ளான்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலவடபாதி பிச்சன்கோட்டகத்தை சேர்ந்த சரோஜா, அப்பகுதியில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வேலைக்குச் சென்ற சரோஜா பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அங்குள்ள வயல்வெளியில் சரோஜா சேற்றில் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சரோஜாவை பாலியல் வன்முறைக்கு கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தான். இதையடுத்து அவனைக் கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post Next Post