ராணுவத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவன்: மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ராணுவத்தில் பணியாற்றும் கணவன் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் திடீரென காணாமல் போன சம்பவம் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (40). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் விடுமுறைக்காக தாமரைக்கண்ணன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அதன் பிறகு சம்பவத்தன்று பெங்களூரில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மனைவி தவசீலாவிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதன் பின்னர் தாமரைக்கண்ணன் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி தவசீலா உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் தாமரைக்கண்ணை தேடி வருகிறார்கள்
Previous Post Next Post