திருமணமான இரண்டு வாரத்தில் மாயமான புதுப்பெண்: அதிர்ச்சியில் உறைந்த கணவன்

இந்தியாவில் திருமணமான இரண்டு வாரத்தில் புதுப்பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சன்னி (28). இவருக்கும் திவ்யா (22) என்ற பெண்ணுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து புதுமணத் தம்பதிகள் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று திவ்யா வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.

மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த சன்னி அவரை தேடி பல இடங்களில் அலைந்தார்.

ஆனால் திவ்யா கிடைக்காததால் பொலிசில் புகார் அளித்தா சன்னி.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் திவ்யாவை தேடி வருகிறார்கள்.


Previous Post Next Post