வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி: கதறி அழுத சகோதரிகள்


திருப்பூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, மனைவி இந்திராகாந்தி (41) தன்னுடைய மகள்கள் பெரியநாயகி (23), தாமரைச்செல்வி (21) மற்றும் ரசியா (19) ஆகியோரை அழைத்துக்கொண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் குடியேறிவிட்டார்.

இவருடைய மூத்த மகள் பெரியநாயகிக்கு திருமணம் முடிந்துவிட்டது. தாமரைச்செல்வி, பணப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இந்தியாராகாந்தியுடன், அவருடைய கடைசிமகள் ரசியா தங்கி இருந்து வந்துள்ளார்.

அரசு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த ரசியா, அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த இந்திராகாந்தி மகளை கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த ரசியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய இந்திராகாந்தி நீண்ட நேரம் கதவை தட்டியும் ரசியா திறக்காததால், சந்தேகமடைந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார்.

அப்போது ரசியா சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ரசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post