தமிழகத்தில் இரண்டு குழந்தைகளில் சாவில் மர்மம் இருப்பதாக கருதும் பொலிசார் அவர்களது தாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூரின் பண்ருட்டி அருகே கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி ஜெயசித்ரா.
இவர்களுக்கு மிதுன்(வயது 4), லட்சன்(8 மாதம்) என இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் லட்சன், அண்டாவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பான விசாரணையில் தன்னுடைய குழந்தை தவறி அண்டாவில் விழுந்து விட்டதாக கதறி அழுதார் ஜெயசித்ரா.
இதனை தொடர்ந்து குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள பனங்குப்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மிதுனும் தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தான்.
மகனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் பொலிசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே ஜெயசித்ராவும் தலைமறைவாகிவிட பொலிசுக்கு சந்தேகம் வலுத்தது, எனவே தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.
மேலும் ஜெயசித்ராவின் செல்போனை ஆய்வு செய்தும் வருகின்றனர், கண்காணிப்பு கமெராவும் சோதனை செய்து வருவதால் விரைவில் ஜெயசித்ரா சிக்குவார் என நம்பப்படுகிறது.