தந்தை போன்று நினைத்து பழகினாள்: கயவர்களால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை


தஞ்சாவூர் மாவட்டத்தில் தந்தை போன்று பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

9 மாதங்களுக்கு முன்னர் தந்தையை இழந்த, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் மீரா சில்க்ஸ் என்ற ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்துள்ளார்.

அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் கடை உரிமையாளரின் நண்பனான சின்னப்பா என்பவன் இளம்பெண்ணிடம் தந்தை ஸ்தானத்தில் பழகி வந்துள்ளார்.

இளம் பெண்ணும், அந்த நபரிடம் நன்றாக பழகியுள்ளார். இந்நிலையில், தீபாவளி முடிந்து அடுத்தநாள் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் சின்னப்பா.

இளம்பெண்ணும் அந்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த அந்த இளம்பெண் சின்னப்பா கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் மயங்கியதாகக் கூறப்படுகிறது. சில மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த இளம்பெண்ணுக்கு உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு வந்தபோது அதிக அளவில் உதிரப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ததில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சின்னப்பாவை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலைய பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னப்பாவுடன் தொடர்புடைய மற்றவர்களையும் உடனடியாக கைது செய்யக்கோரி, பெண்ணின் உறவினர்கள், மாதர் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.
Previous Post Next Post