
வெளிநாட்டு மணமகனுக்காக இந்திய கலாசாரத்தை மாற்றிய மணமகள்: புகைப்படத்தால் குவியும் லைக்ஸ்
இந்தியாவின் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட தீபா கோஸ்லா என்ற பெண்மணி தனது திருமணத்தின்போது மணமகனையும் மரியாதை நிமித்தமாக காலில் விழச்செய்துள்ளார்.
தனது 17 வயதில் சட்டம் படிப்பதற்காக நெதர்லாந்து சென்றவர், வழக்கறிஞராக ஆன பின்பு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
இவருக்கும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓலெக் புல்லர் என்பவருக்கும் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் ஆண்களின் கால்களில் பெண்கள் விழுந்து மரியாதை செலுத்தும் விதியை மாற்றி எழுதியிருக்கிறார் மணமகள் தீபா.
நடந்தவை குறித்து மணமகள் தீபா பகிர்ந்துகொண்டதாவது,
ஏன் பெண்கள் மட்டும் ஆண்களின் காலில் விழ வேண்டும். பரஸ்பர மரியாதை என்றால் இருவரும் காலில் விழலாமே' என்று நான் கேட்டவுடன் அம்மாவுக்கு அதிர்ச்சி.
அம்மாவால் பதிலளிக்க முடியவில்லை. இருவரும் பரஸ்பரம் காலில் விழுந்து மரியாதை செலுத்திக்கொள்ளலாம் என்று அந்த கணம் நாங்கள் முடிவெடுத்தோம்
இந்திய கலாசாரம் இதை அனுமதிக்காது எனத் தெரியும். இருந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
திருமணம் நடந்து முடிந்த பிறகு, யார் முதலில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்பதுதான் சுவாரஸ்யம். உறவினர்களுக்குள் இது விவாதமாக மாறக் கடைசியில் மணமகன் ஓலெக் புல்லரே முதலில் காலில் விழுந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களுக்கும் தீபாவின் பதிவுக்கும் வலைதளங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது என கூறியுள்ளார்.