
பல்லடம் பகுதியில் பல வாரங்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டில், இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் கிரிச்சி பாளையம் பகுதியில் செந்தில் (40) என்பவர் வாடகை வீடு ஒன்றினை எடுத்து இளம்பெண்ணுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே அந்த வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த பிரகாஷ் என்பவர் வீட்டை சுத்தம் செய்து குடியேற நினைத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த பேழையில் பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருடைய உடலில் எஸ்.எல் என குத்தப்பட்டிருந்த பச்சை குறித்து, செந்தில் வேலை செய்துவந்த மில்லில் விசாரணை பொலிஸார் மேற்கொண்டனர்.
அங்கு, இறந்து கிடந்த பெண்ணை பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதில், லதா தாராபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரின் நினைவாக தான் கையில் எஸ்.எல் என பச்சை குத்தியுள்ளார். இந்த தம்பதியினர் இருவருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர்.
லதாவிற்கும், சக்திவேலுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 6 வருடங்களுக்கு முன்னதாகவே குழந்தைகளை அழைத்துக்கொண்டு சக்திவேல் தனியாக சென்றுவிட்டார்.
பின்னர் மில்லில் வேலை செய்துவந்த லதாவிற்கு சின்னகாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் 4 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் தான் லதாவை கொலை செய்துவிட்டு, செந்தில் மாயமாகியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.