விட்டுவிடு என மன்றாடினேன்... ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதால் கொலை செய்தேன்: பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 17-ம் திகதி தண்டுமாரி என்ற பெண் தனது மகனுடன் இணைந்து ரவுடி தங்கராஜை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்தது குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.



கொலைசெய்யப்பட்ட ரவுடி தங்கராஜ் மீது கொலை உட்பட 30-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த தண்டுமாரி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தண்டுமாரியை இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது அவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரவுடி தங்கராஜ், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டினார். மேலும், தங்கராஜ் ஆசைக்கு நான் இணங்க மறுத்ததால், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.






சம்பவத்தன்று இரவும், மது போதையில் வீட்டுக்கு வந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என்னை விட்டுவிடு என அவனிடம் மன்றாடினேன். ஆனால் அவன் கேட்கவில்லை.

தொடர்ந்து தங்கராஜ் ஆக்ரோஷமாக தாக்கி பாலியல் தொல்லை அளித்ததால், அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்றேன். இதில் எனது மகன்கள் ஈடுபடவில்லை, நான் மட்டுமே கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
Previous Post Next Post