இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதர்!

காலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வரும் போட்டியில் நிர்வாணமாக நுழைந்த நபரினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டியின் இரண்டாவது நாளான நேற்று, ஓய்வு நேரத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.

இதன்போது நிர்வாணமாக மைதானத்திற்குள் நுழைந்த நபர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபரை பிடிப்பதற்கு பலர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அவர் மைதானத்திற்குள் குழப்பம் விளைவித்துள்ளார். பலத்த முயற்சியின் பின்னர் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Previous Post Next Post