தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவருக்கு வசந்தபிரியா என்ற மகள் உள்ளார்.
அவர் கும்பகோணத்தில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வசந்தபிரியா உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் வசந்தபிரியாவின் உடலைக் கைப்பற்றி அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28-ஆம் திகதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னரும் வழக்கம்போல் வசந்தபிரியா வேலைக்கு சென்றுள்ளார். நேற்று மாலை பள்ளி முடிந்து வசந்தபிரியா வீட்டிற்கு புறப்பட்டு சென்ற போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வசந்த பிரியாவை அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்கள் இருவரும் காவிரி ஆற்றின் படித்துறையில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்த பிரியாவின் கழுத்தை அறுத்து கொன்று அங்கிருந்து தப்பிவிட்டார்.
அங்கு யாருடன் அவர் வந்தார்? அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்பது குறித்து இது வரை சரியான தகவல் தெரியவில்லை.
கொலை நடந்த இடத்தில் இரண்டு செல்போன்கள், பேனா கத்தி ஆகியவை கிடந்துள்ளன, அதை கைப்பற்றியுள்ளா பொலிசார், அதன் பின் கூறுகையில், அந்த இளைஞரும், வசந்தப் பிரியாவும் காதலித்து வந்ததாகவும், ஆனால் வசந்த பிரியாவுக்கு வேறு ஒருவருடன் கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது குறித்து பேசுவதற்காக அந்த இளைஞர் பள்ளிக்கு வந்து வசந்தப்பிரியாவை அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வசந்த பிரியா கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.