அந்த சாதியில பொறந்த உனக்கெல்லாம் எதுக்கு? கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு! ஆசிரியையின் கேவலமான செயல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவனை அவனது சாதி பெயரை சொல்லி மிக மோசமாக திட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



காளியண்ணன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றும் ஜமுனேஸ்வரி என்ற ஆசிரியை மீதுதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து புகார் அளித்துள்ளனர்.

ஆனால், பள்ளி தலைமையாசிரியர் இந்த சம்பவம் குறித்து பேசுவதற்கு மறுத்துவிட்ட நிலையில், மாணவர்கள் என்ன நடந்தது என்பது குறித்து தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் கூறியதாவது, எங்கள் வகுப்பில் எல்லா சாதியை சேர்ந்த பிள்ளைங்களும் படிக்கிறோம். எங்களுக்குள்ள எந்த உயர்வு தாழ்வும் இல்லாம ஒற்றுமையா இருக்கோம்.

ஜமுனேஸ்வரி ஆசிரியை பல வருஷமா இந்த ஸ்கூல்ல வேலை பார்க்குறாங்க. `கடுமையா நடந்துப்பாங்க. அடிக்கிறது, பனிஷ்மென்ட் கொடுக்கிறதெல்லாம் பிரச்சனையே இல்லை.






ஆனால், திடீர்னு சாதியைச் சொல்லிக கேவலப்படுத்த ஆரம்பிச்சதை எங்க யாராலும் தாங்கிக்க முடியலை.

ரகு என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பையன், ஒருநாள் வீட்டுப்பாடம் செய்யவில்லை. அதுக்காக அவன் சாதிப்பெயரைச் சொல்லி அசிங்கமாத் திட்டிட்டாங்க. `நீயெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடத்துக்கு வர்ற'னு... அவன் சாதியைச் சொல்லி, `இந்தச் சாதிக்காரவனுங்களுக்கெல்லாம் படிப்பு எதுக்குடா? போய் கக்கூஸ் கழுவு'னு எங்க எல்லோர் முன்னாடியும் திட்டி அவனோட நோட்டு, புத்தகங்களை மாடியிலிருந்து கீழ தூக்கி வீசிட்டாங்க.

அவன் அழுதான். அதிலிருந்து ஒருமாசத்துக்கு மேல அவன் பள்ளிக்கூடத்துக்கே வரவில்லை. அதன்பிறகு அவனது பெற்றோரிடம் பேசி நாங்கள்தான் பள்ளிக்கூடத்துக்கு வரசொன்னோம்.

அதுக்குப் பிறகும் ஜமுனேஸ்வரி ஆசிரியை தன்னோட அணுகுமுறையை மாத்திக்கலை. ரகுவை, சாதியைச் சொல்லி திட்டிக்கொண்டே இருந்தாங்க. தலைமை ஆசிரியரிடம் நடந்ததைச் சொன்னோம். ஆனா, அவர் அதைக் கண்டுக்கவே இல்லை.

நாங்கள் புகார் கொடுத்த காரணத்தால், எங்களுக்கு வகுப்பு நடத்தாமல் புறக்கணித்தார்கள் என கூறியுள்ளனர்.
Previous Post Next Post