மனைவி ரஜினியுடன் விவாகரத்து: நடிகர் விஷ்ணு விஷால்- அதிர்ச்சியில் ரசிகர்கள்


தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டேன் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் ஜீவா, ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், நானும் என் மனைவி ரஜினியும் ஒரு வருடத்துக்கு மேலாக பிரிந்து வாழ்கிறோம்.

இப்போது சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டோம். எங்களுக்கு அழகான மகன் உள்ளான், அவனை இணைந்து கவனித்து கொள்வதே எங்கள் முக்கிய கடமை.

அருமையான வருடங்களை இணைந்து நாங்கள் செலவழித்தோம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக எப்போதும் இருப்போம்.

எங்கள் தனியுரிமையை மதிக்கும்படி எல்லோரையும் கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளார்.



Previous Post Next Post