200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்: ரஜினி இரங்கல்

மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அம்பரீஷ் (66).

சீத்தாராமையா தலமையிலான அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்த அம்பரீஷ், ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார்.இவர் தன்னுடைய முதல் படமான Naagarahaavu படத்திற்காக தேசிய விருது வாங்கியுள்ளார்.

அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதனை அறிந்த நடிகர் ரஜினி தன்னுடைய நண்பரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post