கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை: திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவுஇந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சரஷ்வதி (19). இவருக்கும் ஜகதீஷ் என்பவருக்கும் கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.

இதன்பின்னர் கணவர் வீட்டுக்கு சரஷ்வதி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு மண்ணெண்ணெயை எடுத்து சென்ற சரஷ்வதி அதை தனது உடலில் ஊற்றி கொண்டு தீவைத்து கொண்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு பதறிய குடும்பத்தார் சரஷ்வதியை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரஷ்வதியின் விருப்பமில்லாமல் இந்த திருமணம் நடந்தது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே இம்முடிவை அவர் எடுத்துள்ளார். 

இது குறித்து பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Previous Post Next Post