30 நாட்களில் மணக்கோலத்தில் செல்ல வேண்டிய மகளை பிணமாக்கிய தந்தை: நடந்த விபரீதம்



புதுச்சேரியில் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மகள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.

பாலகிருஷ்ணன்(வயது 60). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இவரது மனைவி வனஜா(50). இவர்களுக்கு வெங்கடேஸ்வரி, ஹேமலதா, தீபாவதி(23) என 3 மகள்கள் உள்ளனர்.

இதில் வெங்கடேஸ்வரி, ஹேமலதா ஆகிய 2 பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், தீபாவதிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிகைகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வந்தது.

அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் பாலகிருஷ்ணன் சண்டை போடுவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது.

மனைவி மற்றும் மகளை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் பாலகிருஷ்ணன்.

3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்தனர்.
Previous Post Next Post