உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மார்டிர். இவருக்கும் அம்ரா தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த 1971-ல் திருமணம் நடைபெற்றது.
ராணுவத்தில் வேலை செய்த மார்டிர் திருமணம் முடிந்து மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் கூட எடுத்துகொள்ளவில்லை.
அம்ராதேவியை மணந்த சில நாட்களிலேயே போருக்கு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்தார்.
அப்போது 18 வயதேயான அம்ராதேவி கணவரின் முகத்தை கூட இறுதியாக பார்க்கவில்லை. போர் நடந்த இடத்திலேயே மார்டிரின் சடலம் புதைக்கப்பட்டது.
மார்டிரின் ஒரு புகைப்படம் கூட இல்லாத நிலையில் அவரின் புகைப்படம் வேண்டும் என அம்ராதேவி கோரினார்.
இப்படி பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னர் தற்போது மார்டிரின் புகைப்படம் 65 வயதான அம்ராதேவிக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ராணுவ மறுவாழ்வு துறையினர் கூறுகையில், நாங்களும் பல ஆண்டுகளாக மார்டிரின் புகைப்படத்தை தேடியும் கிடைக்கவில்லை.
ஒருவழியாக குரூப் போட்டோவில் மார்டிர் இருப்பது போன்ற புகைப்படம் கிடைத்தது.
நாங்கள் முன்னரே மார்டிரின் புகைப்படத்தை வரைய நினைத்தோம்.
ஆனால் அவர் மனைவி அம்ராதேவி உட்பட யாருக்குமே அவரின் முகம் நினைவில் இல்லை என கூறினர்.
அம்ராதேவி கூறுகையில், என் கணவரின் முகமே எனக்கு மறந்துவிட்டது, திருமணமான உடனேயே அவர் இறந்தது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
47 ஆண்டுகள் கழித்து அவர் முகத்தை புகைப்படம் மூலம் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.