சென்னையில் கணவனை பிரிந்து தனியாக வசித்த மனைவி: பட்டப்பகலில் நேர்ந்த சம்பவம்



சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைந்தகரையை சேர்ந்த டேவிட் என்பவரும் ரேகா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் டேவிட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் வாய் தகராறு நடந்து வந்தது.

பிரச்சனை அதிகமானதன் காரணமாக தனது குழந்தைகளுடன் தனி வீட்டில் லேகா வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் லேகா சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது கணவர் டேவிட் அவரை கத்தியால் குத்தினார்.

இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் லேகா.

இதையடுத்து டேவிட்டை கைது செய்துள்ள பொலிசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post