
இந்தியாவில் ரயிலில் பயணித்த கர்ப்பிணியிடம் இருந்த நகைகளை பறிக்க சிலர் முயன்ற நிலையில், அப்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் திவ்யா, கர்ப்பமாக இருந்த திவ்யா ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது திவ்யா பயணம் செய்த ரயில் பெட்டிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவர் கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயன்றனர்.
ஆனால் தனியாளாக திவ்யா அவர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் திவ்யாவை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
இதில் திவ்யாவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்ட போதும் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் திவ்யாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.