மனைவிக்கு ஏற்கனவே திருமணமானது தெரியாமல் வாழ்ந்து வந்த கணவன்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி


இந்தியாவில் இளம் பெண்ணை திருமணம் செய்த கணவன் வாழ்ந்து வந்த நிலையில் அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விடயம் கணவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலத்த்தின் வடோதராவை சேர்ந்தவர் ஹர்ஷல் படேல். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆன நிலையில் தொடக்கத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.

பின்னர் கணவரிடம் அடிக்கடி பணம் கேட்டு திவ்யா தொந்தரவு செய்ததோடு அவரின் குடும்பத்தாரும் படேலை துன்புறுத்த தொடங்கினார்கள்.

இந்நிலையில் தனது மனைவி திவ்யாவுக்கு ஏற்கனவே அஜய் என்பவருடன் திருமணம் ஆனதை படேல் கண்டுப்பிடித்தார்.

இது குறித்து படேலின் சகோதரி சாயா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், திவ்யா மற்றும் அவர் குடும்பத்தார் 4 பேரும் அவளுக்கு திருமணம் ஆனதை மறைத்து படேலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அஜய் - திவ்யா திருமண சான்றிதழை சமீபத்தில் பார்த்த பின்னரே இதை கண்டுப்பிடித்தோம்.

இதோடு படேலை ரூ.10 லட்சம் பணம் கேட்டு திவ்யாவும், அவர் குடும்பத்தாரும் மிரட்டி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
Previous Post Next Post