கணவரை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி: அடுத்தடுத்து வெளியாகும் தகவல்இந்தியாவில் கணவரை கொலை செய்த மனைவி இணையதள உதவியுடன் கொலைக்கான திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜட். இவர் மனைவி அனிந்திதா, தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

கடந்த வாரம் ராஜட், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அனிந்திதா பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

இதை நம்பிய பொலிசார் ராஜட்டின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் அனிந்திதாவின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில், கணவரின் கழுத்தை செல்போன் சார்ஜர் மூலம் நெரித்து கொலை செய்ததை அனிந்திதா ஒப்பு கொண்டார்.

அவர் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், கணவர் ராஜட் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார்.

அதனால் அவருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் ராஜட்டிடம் விவாகரத்து கோரியது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால் கொலை செய்தேன் என கூறினார்.

இந்நிலையில் கொலைக்கான திட்டத்தை இணைதளம் மூலம் அனிந்திதா போட்டது தற்போது தெரியவந்துள்ளது.

எப்படி கொலை செய்வது என கூகுளில் அனிந்திதா தேடிய நிலையில் பின்னர் search history-ஐ அழித்துள்ளார்.

இதோடு காதலனை இளம்பெண் கொன்று சடலத்தை சாப்பிட்டார் என்று வந்த செய்தியை பேஸ்புக்கில் அனிந்திதா பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் அவரின் மனநிலை எந்தளவில் இருந்தது என்பதை உணர முடிகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் கைது செய்யப்பட்ட அனிந்திதாவை டிசம்பர் 28ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post