சிறிய காயத்தை சாதாரணமாக விட்ட பெண்! எட்டு விரல்களும் அழுகிபோன பரிதாபம்: எச்சரிக்கை தகவல்சீனாவில் இடது கையில் ஏற்பட்ட சிறிய காயத்தை கவனிக்காமல் விட்டதால்,பெண்ணின் 8 விரல்களும் அழுகிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Hubei மாகாணத்தைச் சேர்ந்தவர் Zhang. 53 வயதான இவர் வீட்டு வேலை செய்த போது அவருடைய இடது கையில் சிறிய அளவிலான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

அதை கவனிக்காமல் அதற்கு எந்த ஒரு முதலுதவியும் செய்யாமல், சாதாரணமாக விட்டுள்ளார்.

இதனால் இரண்டு தினங்களுக்கு பின் அந்த காயம் பட்ட பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அது அப்படியே கைகளில் இருக்கும் அடுத்தடுத்து விரல்களுக்கு பரவி கை ஒரு கருப்பு நிறத்தில் அழுகி நிலையில் மாறியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்ட போது, gangrene என்ற நோய் தொற்று என்று கூறியுள்ளனர்.

இந்த தோற்று மிகவும் ஆபத்தானது எனவும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் இறக்க கூட நேரிடலாம், இது அதிகமாக விரல்கள், கால்விரல்கள் மற்றும் மூட்டுகளில் தான் தாக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Zhang-க்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post