தலையை தனியாக துண்டித்து கொலை செய்த ரஜினி: உதவி செய்த அனிருத்... திடுக்கிடும் சம்பவம்

இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டவை சேர்ந்தவர் பூப் சிங் (34). இவர் தனது மனைவி ரஜினி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டருகில் வசிக்கும் அனிருத் (32) என்பவருடன் ரஜினிக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அனிருத்துடன் ரஜினி ஓடிபோனார்.

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மனைவி ரஜினியை கண்டுப்பிடித்து வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார் பூப்சிங்.



ஆனால் அவருக்கு பூப்சிங்குடன் வாழ பிடிக்காத நிலையில் அனிருத்துடன் சேர்ந்து அவரை கொல்ல திட்டமிட்டார்.

அதன்படி, வீட்டுக்கு மது போதையில் வந்த பூப்சிங்கை ரஜினியும், அனிருத்தும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் தலையை தனியாகவும், உடலை தனியாகவும் காட்டு பகுதியில் புதைத்துள்ளனர்.

பின்னர் நான்கு நாட்கள் கழித்து தனது கணவரை காணவில்லை என நாடகமாடிய ரஜினி இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

சம்பவம் குறித்து விசாரித்த பொலிசார் பூப் சிங்கின் உடலையும், தலையையும் கைப்பற்றினார்கள்.




இதனிடையில் ரஜினியின் கள்ளக்காதல் விடயத்தை தெரிந்து வைத்திருந்த பூப்சிங்கின் சகோதரர் பொலிசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து ரஜினியிடம் பொலிசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அனைத்து உணமைகளையும் அவர் ஒத்து கொண்டார்.

இதையடுத்து பொலிசார் ரஜினி மற்றும் அனிருத்தை கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post