உறவினரை கொலை செய்தது ஏன்? வாலிபனின் வாக்குமூலம்
திருப்பூர் மாவட்டத்தில் பெண் பிரச்சனை காரணமாக வாலிபரை அவரது உறவினர் கொலை செய்தது குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முருகன்(வயது 20). திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் ஆறுமுகம்(26). இவர்கள் இருவரும் திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம்நகரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

முருகனின் உறவினர் சசிகுமார் என்பவரும் அவ்வப்போது இவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்துபோவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, இருவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்படியே பேசிக்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட வாய்த்தகராறில், சசிகுமார் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்ததுடன் சரமாரியாக உடலில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் சசிகுமார் அங்கிருந்து தப்பியுள்ளார்.

திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வைத்து சசிகுமாரை பொலிசார் நேற்று பிடித்தனர். பின்னர் பொலிசிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஏற்கனவே எனக்கும் முருகனுக்கும் பெண் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.

இதனால், எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனை நிலவி வந்தது, இதனால் அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன், மது அருந்துவதற்கு என்னடன் அழைத்து சென்று அவனை கொலை செய்ய திட்டமிட்டு அதனை நடத்தினேன் என கூறியுள்ளார்.
Previous Post Next Post