ஆசைவார்த்தை கூறி என் மகளை கூப்பிட்டு போயிட்டான்! பொலிசாரிடம் கண்ணீர்விட்டு கதறிய பெற்றோர்
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் ஆசைவார்த்தைகள் கூறி தங்கள் மகளை கடத்திச் சென்றுவிட்டதாக பெற்றோர் புகார் கொடுத்திருந்த நிலையில், பொலிசார் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அந்த தம்பதி காவல்நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இருக்கும் பாலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர் தன் மனைவி மற்றும் மகனோடு பாலாவிடுதி காவல்நிலையத்திற்கு வந்து, திடீரென்று தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணய் கேனை தங்கள் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார் உடனடியாக அவர்களை தடுத்து, எதற்காக இப்படி காவல்நிலையம் முன்பு வந்து தற்கொலை செய்து கொள்கிறீர்கள் என்று கேட்ட போது, வெள்ளைச்சாமி மிகுந்த வேதனையுடன், என் மகள் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்து வருகிறாள்.

அவளை இதே ஊரைச் சேர்ந்த ஜே.சி.பி டிரைவராக இருக்கும் மூர்த்தி என்கிற இளைஞர் ஆசைவார்த்தை கூறி அவளை கடத்திச் சென்றுவிட்டான்.

இதனால் எங்கள் மகளை மீட்டு கொடுங்கள் என்று இந்த காவல்நிலையத்தில் வந்து தான் புகார் கொடுத்தோம்.

நடவடிக்கை எடுப்பதாக கூறி ஏமாற்றுகிறீர்களே தவிர, நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை, மகளை பார்க்காமல் வேதனையில் இருக்கும் நாங்கள் காவல்நிலையம் முன்பு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவிலே இப்படி முடிடு எடுத்தோம், ஆனால் அதையும் தடுத்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

உடனே பொலிசார், உங்கள் மகளை நீங்க சரியா வளர்க்காம, இங்க வந்து தற்கொலை முடிவா? அந்த நபரை தேடிக்கிட்டு தான் இருக்கிறோம்.

கண்டிப்பாக மீட்டு தருகிறோம் என்று பொலிசார் கூறியுள்ளார். இருப்பினும் வெள்ளைச்சாமி என் மகளை மீட்டு தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறுவழியில்லை என்று கண்ணீர்மல்க கூறி சென்றுள்ளனர்.
Previous Post Next Post