ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த விஸ்வாசம்- கொண்டாட்டம் போட ரசிகர்கள் அதிரடி


ரசிகர்களுக்கு ஒரு வருட ஏக்கம் அஜித்தை திரையில் பார்க்க முடியவில்லையே என்பது தான். அந்த ஆசை பொங்கலுக்கு கோலாகலமாக நிறைவேறிவிட்டது.

அஜித்தின் விஸ்வாசம் படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமைந்துவிட்டது. படத்தை பார்த்து வெளியே வரும் அனைவரும் சூப்பர் படம், கண் கலக்க வைத்துவிட்டது என்று தான் கூறுகிறார்கள்.

மக்களின் பேராதரவை பெற்ற இப்படத்தின் வசூலில் எந்த குறையும் இல்லை, தற்போது படம் ரூ. 100 கோடியை எட்டிவிட்டதால் படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். அதனால் வழக்கம் போல் #Viswasam100Crs டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்கின்றனர்.

அதோடு 100 கோடி வசூல் என்று கூறி ஒரு புதிய போஸ்டர் ஒன்றையும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Previous Post Next Post